Saturday, November 12, 2022

29 Maruthuva Ariviyal manadu

29 வது மருத்துவ அறிவியல் மாநாடு /இடம் இந்தியன் அலுவலர் சங்கம்  A /C HALL இராயப்பேட்டை,சென்னை -600 014.நாள் 
22 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை 2023       
கருப்பொருள் ;  தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட,அண்ணாக்கு மற்றும்  குரலுக்கு நிவாரணம்   செய்திகளை இலக்கிய எடுத்துக்காட்டோடு எனக்கு அனுப்புங்கள்.                                                     @                                             புத்தகம் வெளியிடுவோம்
Dr.M.Kumaresan,ENT Surgeon, SIVA ENT Hospital, 159, Avvai Shanmugam Salai, Royapettai, Chennai 14, Cell & Whatsup 9841055774, Email: kumaresan@doctor.com
        மகரக்கட்டு குரல் (பியூபர்போனியா, puberphonia) என்பது பருவமடைதலுக்குப் பிறகு ஆண்களில் பெண்மை தன்மை உடைய கீச்சுக்குரல். 
       1000 கீச்சுக்குரலுடைய  ஆண்கள், எங்களது புதிய மருத்துவ சிகிர்சை பெற்றனர்.  இதற்கு அறுவையோ மருந்தோ தேவை இல்லை. அண்ணாக்கின் சக்தியை கூட்டும் பயிற்சியை 5 நாள் கொடுத்து, பூரண ஆண் குரல் பெற பயிற்சி மேற்கொண்டு, உலகத்திற்க்கு ஓர் வழிகாட்டும் மருத்துவம் கண்டுபிடித்துள்ளோம். ஆணும்  பெண்ணும் சிறுவர்களாக இருக்கும் போது பெண் சுருதி குரலே இருக்கும். ஆண் விடலைப் பருவத்தில் குரல் உடைகிறது. பெண் குரலே சிலருக்கு தொடர்ந்து காணப்படும். பருவ வயதாகும் போது  இக்குரல் மாறுவது கிடையாது. ஆண்களின் கம்பிரத்ததை எடுத்துக்கூறுவதாக இருக்காது. பெண்மை குரலுடைய ஆண்கள், தனது அனைத்து உறுப்புகளும் நன்றாகவும் திறமையாகவும் இருப்பினும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.  இக்கீச்சிக்குரல் உடைய ஆண்களை பெண்களும், பொதுமக்களும் பேடி என்பதுபோல் தவறாக எண்ணுகிறார்கள் .
         சங்க கால நூல்களில் குரல் வளத்தை சரி செய்வதை கூறியிருப்பதை அறிந்து பெருமிதம் அடைகிந்தோம். பேச்சின் செயல்திறனை மேம்படுத்த அவ்வையார், தொல்காப்பியம், திருமந்திரம் பின் பற்றி 30 வருடம் ஆய்வு செய்துள்ளோம்.
அ,    பேடு ஒரு நோய் என்று உலகத்தில் முதலில் கூறியவர் அவ்வையார்
         “பேடு நீங்கிப் பிறத்தல் அரிது”
ஆ.    திறம்பட பேச அடி வயிற்றில் இருந்து காற்று  வர வேண்டும் என்று முதலில் 
          கூ றியவர் தொல்காப்பியர், “உந்தி முதலா முந்து வளி தோன்றி”
இ.     பண்ணுக்கு (இசை) அண்ணாக்கு தேவை என்று கூறியவர் திருமூலர்
ஈ.     சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் ஜீவச மாதி  அடைந்துள்ளார்.
உ.     இறைவன் முருகவேள் தமது திருக்கரத்தில் விளங்கும் ஞானவேலால்       அருணகிரிநாதர்  நாவில் எழுதி ஆசீர்வதித்தார். இச்செய்கை தான் பேசாதவர்களுக்கு “அலகு குத்தல்” இறை   சடங்காக மாறியதோ?
          சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே என் கருத்து. நம் தமிழ்  இலக்கியங்களில் இருக்கும் அறிவு திரவியதை நாம் உணர வேண்டும்.  அதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வது நம் கடமை. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட,அண்ணாக்கு மற்றும்  குரலுக்கு நிவாரணம் செய்திகளை இலக்கிய எடுத்துக்காட்டோடு எனக்கு அனுப்பினால் ஒரு புத்தகமாக அவரவர் பெயரில்  வெளியிடுவேன். அனைத்து கட்டுரை ஆசிரியர்களும் சிறப்பிக்கப்படுவார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 5 மணிக்கு YouTube Dr.Kumaresan வலையத்தில் தமிழ் ஆர்வலர்கள் அனுப்பிய கீச்சுக்குரல் கட்டுரைகள் அறிவிக்கப்பட்டு விமர்ச்சிக்கப்படும். உங்கள் கட்டுரையை இன்றே அனுப்புங்கள்.

No comments: